நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

Politics Racist Tamil People Independence India Democracy

Image
Edited

இங்கே யாரும் நல்லவர்கள் இல்லை, நீயும் நானும் உட்பட. நமக்காக நாம் உழைப்பது இல்லை. எவரோ ஒருவருடைய பார்வைக்காகவும் நம் மீது திணிக்கப்போகிற அடையாளத்திற்காகவும் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒரு வித எதிர்பார்ப்பு கலந்த ஏக்கம். நான் உனக்கோ அல்லது நீ எனக்கோ நன்மை செய்பவராக மாற மாட்டோமா என்று.

சாலையில் விதிகள் மீறுபவர்கள் மீதும், குடிபோதையில் சாலைகளை கடப்பவரை பார்க்கும் போதும், அரசின் செயற்பாட்டிற்கு மௌனமாகும் மக்களை காணும் போதும், நீதி மறுக்கப்படும் போது சிலையாகும் சக இனத்தவரை காணும் போதும், விலங்குகளை துன்புறுத்தும் போதும் கண்ணெதிரே இயற்கை சூறையாடப்படும் போதும், விவசாயமே அழிக்கப்படும்பொழுது நடிகைக்காகவும் நடிகர்க்காகவும் பொங்கும் போதும், இனவாதம் மதவாதம் தலைவிரித்தாடும் போதும், இனத்தின் அடையாளம் ஆதாரம் அழிக்கப்படும் போதும், அமைதியா, பொறுமையா, வெறுமையா என்ன நிகழ்வு தான் இது என்று புரியாமல் வாழும் நிலை இருக்கிறதே. இதற்கு தான் நாம் சுதந்திரம் பெற்றோமா?

சுதந்திரம் பெற்றது அடிமைத்தனத்திற்காகவா? ஒழுங்கீனத்திற்காகவா?

இதை யார் படித்தாலும் சரியாகவே இருக்கும்... ஏக்கம் எனக்கு மட்டும் இல்லை, ஏனென்றால் நானும் சரியானவனாக இருக்கவில்லை.

Where you Stand? ஆம் or இல்லை
 • Agreed

  • Nithya Sudarsana Kumar M

   சுவாசிக்க 'செயற்கை' காற்று இல்லாமல் 63 தெய்வங்களை இழந்துள்ளோம்.. ஆனால் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டுருக்கோம்

 • Disagreed

  • Ponsakthi Anand

   குடிகளின் தேவையறியா கோன் பாதகமே

  • Ananda kumar

   No, i disagree

  • Catherin Benitha

   Definitely not!!! If it was so I would have dissolved the TN government now