திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2012 02:13
பேஸ்புக் இணையதலதி தற்போது மிகப்பெரும் புரட்சி செய்துள்ளது. சொல்லவேண்டுமானால் உலகில் தற்போது பேஸ்புக் பற்றி தெரியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம். கடந்த ஓரிரு வருடங்களில் தனது பயனாளர்களின் எண்ணிக்கையை ஐம்பது கோடி (500 மில்லியன்) என்று உயர்த்தியுள்ளது.
ஒருகாலத்தில் ஆர்குட் (orkut ) மட்டுமே வாழ்கை என்று வாழ்ந்து வந்த இந்திய இளைஞர் பட்டாளம் முழுவதுமாக பேஸ்புக் இணையதளத்திற்கு மாறிவிட்டது . மேலும் கூகிள் கூட தனக்கு ஏற்பட்ட போட்டியை சமாளிக்க கூகிள் மீ என்ற தயாரிப்பில் இறங்கியுள்ளது. அந்த அளவிற்கு பேஸ்புக் தனது திறமையை நிருபித்துள்ளது. இதற்கு முழு காரணம் பேஸ்புக் வழங்கும் கணக்கில் அடங்கா வசதிகள் தான். குறிப்பாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் இணைய விளையாட்டுகள் (FarmVille, the Causes, the Mafia Wars, the Quiz Planet and Phrases ), மற்றும் அனைத்து நண்பர்களையும் தன் பக்கம் இழுக்க தாமே சிலவற்றை உருவாக்கக்கூடிய பயன்பாடுகள் போன்றவை மக்களை பேஸ்புக் முன்னால் கட்டிப்போட வைத்து விட்டது.
தற்போது இதுவே மக்களுக்கு சில பல தொல்லைகளை வழங்குகிறது.
விளையாட்டு போன்ற அனைத்து பயன்பாடுகளும் பொதுவாக பேஸ்புக் இணையதளத்தால் உருவாக்கப்படுவது அல்ல. இவைகள் சுமார் 5,50 ,000 பயன்பாடுகள் அதாவது சுமார் 70 விழுக்காடு பயனாளர்களால் பயன்படுத்தப்படுவது சுமார் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் அதாவது பேஸ்புக் இணையதளத்திற்கு தொடர்பில்லாத முதலாளிகளால் அவர்களது வருமானத்தை பெருக்குவதற்கு உருவாக்கப்படுகிறது. இதை பயனாளிகள் பயன்படுத்தும் போது பயனாளர்களின் தனித்தன்மை வாய்ந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் திருடப்படுகிறது. இதை அவர்கள் தங்களது வியாரத்தை பெருக்கவும் பல சில விளம்பரங்களை அனுப்புவதற்கும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது. இதனால் தேவையற்ற மின்னஞ்சல்களும் பயனாளர்களின் பெயர்களை அனுமதி இன்றி பிரசுரிப்பதுமாக அவர்களும் வியாபாரத்தை பெருக்கி கொள்கிரார்கள் .
தற்போது "Wall Street Journal " என்ற பத்திரிக்கையில் பேஸ்புக் மற்றும் பொதுப்பயன்பாட்டு இணைய தளங்கள் தனது பயனாளர்களின் பாதுகாப்பில் குறிப்பாக மின்னஞ்சல் முகவரி மற்றும் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில் தாழ்ந்துள்ளன எண்டு கூறியுள்ளது.
மேலும் இந்தியாவின் பேஸ்புக் இணையதள பொறுப்பாளர் திரு. கிருத்திகா ரெட்டி கூறுகையில் "பயனாளர்களின் பயன்பாட்டிற்காக நாங்கள் வடிவங்களிலும் புதிய பயன்பாட்டு ஆராய்ச்சியிலும் இறங்கும்போது ஒருசில சிறிய இழப்புகள் வருவது தவிர்க்க முடியாததாகிறது. இறுப்பினும் நாங்கள் பயனாளர்களின் நலன் கருதி சில செயற்பாட்டிற்கு தடை விதித்துள்ளோம்." என்றார்.
என்ன கூறினாலும் பேஸ்புக் இணையதளம் தனது பயனாளிகளுக்கு என்ன சிறப்பு வழங்கினாலும் சிறப்பான பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பது பயனார்களின் குமுறலாக உள்ளது
எது என்னவோ நாம் பேஸ்புக் இணையதளத்தை உபயோகிக்கும் போது சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.