
ஆசிய போட்டிகள் இந்திய இரண்டாவது தங்கம்: சாதனையா? வேதனையா?
கோங்க்சு: இந்திய துடுப்பு படகு வீரர் பஜ்ரங் லால் தகார் தங்கம் வென்று துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெயர் பெற்றார்.
சீனாவில் கோங்க்சு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு ஆண்கள் பிரிவில் தனி நபர் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் லால் தகார், 2000 மீட்டர் தூரத்தை 7 நிமிடம் 4.78 வினாடிகளில் கடந்தார். இதில் தங்கம் வென்ற பஜ்ரங் லால் தகார், ஆசிய விளையாட்டு போட்டிகளில் துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
தங்கம் வென்ற விளையாட்டு வீரர் பஜ்ரங் லால் தகார்க்கு இது சாதனை என்றே கூற வேண்டும். ஏனெனில் இது அவருக்கு கிடைத்த முதல் தங்கம். ஆனால் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் என்பது மிகுந்த வேதனையளிகிறது. நவம்பர் 12 இல் ஆரம்பித்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இது வரை, இந்திய 2 தங்கம் 10 வெள்ளி 12 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை மட்டுமே வென்று 14வது இடத்தில உள்ளது. ஆனால் நம்மை போலவே மக்கள்தொகையில் முன்னணி வகிக்கும் சீனா 138 தங்கம் 65 வெள்ளி 67 வெண்கலம் என மொத்தம் 270 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்திய 10% பதக்கங்கள் கூட பெறவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமே!!


