
நீயுசிலாந்து திணறல்: காரணம் இந்திய இளம் வீரர்களா? ஈரமான ஆடுகளமா?
கண்டிப்பாக இளம் வீரர்களே!!! ஏனெனில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலே நீயுசிலாந்து அணி தலைவர் விட்டோரி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
ஆடுகளம் குறித்து அறிக்கை தெரிவிக்கையில் சுனில் கவாஸ்கர் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்றே தெரிவித்தார், டாஸ் வென்ற நீயுசிலாந்து அணி தலைவர் விட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார். இன்று அவருக்கு கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றி அது மட்டுமே. ஏனெனில் இன்று காலை பயிற்சியில் இடுபட்ட மேக்குல்லாம் காயம் அடைந்தார். இந்திய தரப்பில் முன்னணி வேகபந்து வீச்சாளர் சாகிர் கான் காயம் காரணமாக நீக்கப்பட்டு இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.
பேட்டிங்கை தேர்வு செய்த நீயுசிலாந்து அணியால் ஆடுகளம் செல்ல முடியவில்லை காரணம் ஆடுகளம் ஈரமாக இருந்தது. உணவு இடைவேலைக்கு பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நீயுசிலாந்து அணியை தனது அனல் பறக்கும் பந்துகளால் மீரட்ட ஆரம்பித்தார் ஸ்ரீசாந்த். மீரட்டிய ஸ்ரீசாந்த் அத்துடன் நிற்காமல் நீயுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த ஓவரில் பதம் பார்த்தார்! மார்டின் குப்டில், டிம் மேகின்டோஷ் ஓர் இழக்க ஓட்டங்களில் வெளி ஏறினர்.
இதனை தொடர்ந்து ரோஸ் டெய்லர், கெயின் வில்லியம்சன், டேனியல் விட்டோரி, கரெத் ஹோப்கின்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 82/6 என்ற நிலையில் நியூசிலாந்து தடுமாறியது. இதில் முக்கியத்துவம் முதல் 6 விக்கெட்களை வீழ்த்தியது இந்திய அணியின் இளம் வீரர்களே. அனுபவம் வாய்ந்த பஜ்ஜி தனது சார்பில் ஆறுதலுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
எனவே இதை இளம் வீரர்களின் வெற்றி என்றே கூறவேண்டும்.
ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 148 / 7 என்ற பின்தங்கிய நிலையில் உள்ளது.


