Thalaippu-news
பதாகை
RSS ஓடை

விளையாட்டு

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

கடைசியாக நடைபெற்ற தொடர்களில் வங்காளதேசத்திடம் அடி வாங்கி சில காயங்களுடன் இந்தியாவை எதிர்கொள்ள இந்தியாவிற்கு வந்தது நியுசிலாந்து. திடீரென தனது காயங்களை தேற்றிக்கொண்டார் போல் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த தொடங்கியது அந்த அணி.இருப்பினும் நமது புது பேட்டிங் வரவான ஹர்பஜன் சிங்கிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முதல் இரண்டு ஆட்டங்களையும் ஒரு வழியாக டிரா செய்துவிட்டு மூன்றாவது ஆட்டத்திலாவது வெற்றிக்கொண்டு விடலாம் என்று ஆட்டத்தை தொடங்கியது நியுசிலாந்து அணி.

டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சில் 193 ரன்களுக்கு நொறுங்கிப்போனது. பின்னர் ஆடிய இந்திய அணி நியுசிலாந்து அணியை பந்தாடியது வந்தவர்களெல்லாம் அரைசதம் அடிக்க சற்றே கலங்கிப்போனார் வெட்டோரி. ஒருவழியாக 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி நியுசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தது, இருப்பினும் இந்தியா வேகம் குறையாமல் தனது அதிரடி போக்கை தொடர சுக்கு சுக்காக நொறுங்கி வெளியேறியது நியுசிலாந்து அணி 175 ரன்களுக்கு தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 0:1 என்ற கணக்கில் கோப்பையையும் பறிகொடுத்தது.

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் மூன்றாவது இடத்தில் இந்த வெற்றியையும் சேர்த்துக்கொண்டது. இன்னிக்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை ருசித்தது இந்தியா. ஆட்டநாயகன் விருது 191 ரன்கள் எடுத்த ராகுல் டிராவிட் பெற்றுக்கொண்டார், தொடர் நாயகனின் விருதையோ புதிய நட்சத்திரம் (பேட்டிங்கிற்கு) ஹர்பஜன் சிங் கைப்பற்றினார். இதன் மூலம் தமது முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது இந்திய அணி.

வெற்றிகள் கிரிக்கெட்டுகளில் மட்டும் தானா? உலகில் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன, குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் இன்னும் பல விளையாட்டு வீரர்களே சிறிது சிந்தியுங்கள்

 

 

(2 வாக்குகள், சராசரியாக 4.50 ற்கு 5)

 

ஆசிய போட்டிகள் இந்திய இரண்டாவது தங்கம்: சாதனையா? வேதனையா?

கோங்க்சு: இந்திய துடுப்பு படகு வீரர் பஜ்ரங் லால் தகார் தங்கம் வென்று துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெயர் பெற்றார்.

சீனாவில் கோங்க்சு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு ஆண்கள் பிரிவில் தனி நபர் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் லால் தகார், 2000 மீட்டர் தூரத்தை 7 நிமிடம் 4.78 வினாடிகளில் கடந்தார். இதில் தங்கம் வென்ற பஜ்ரங் லால் தகார், ஆசிய விளையாட்டு போட்டிகளில் துடுப்பு படகு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

தங்கம் வென்ற விளையாட்டு வீரர் பஜ்ரங் லால் தகார்க்கு இது சாதனை என்றே கூற வேண்டும். ஏனெனில் இது அவருக்கு கிடைத்த முதல் தங்கம். ஆனால் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் என்பது மிகுந்த வேதனையளிகிறது. நவம்பர் 12 இல் ஆரம்பித்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இது வரை, இந்திய 2 தங்கம் 10 வெள்ளி 12 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை மட்டுமே வென்று 14வது இடத்தில உள்ளது. ஆனால் நம்மை போலவே மக்கள்தொகையில் முன்னணி வகிக்கும் சீனா 138 தங்கம் 65 வெள்ளி 67 வெண்கலம் என மொத்தம் 270 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்திய 10% பதக்கங்கள் கூட பெறவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமே!!

 

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

நீயுசிலாந்து திணறல்: காரணம் இந்திய இளம் வீரர்களா? ஈரமான ஆடுகளமா?

கண்டிப்பாக இளம் வீரர்களே!!! ஏனெனில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலே நீயுசிலாந்து அணி தலைவர் விட்டோரி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

ஆடுகளம் குறித்து அறிக்கை தெரிவிக்கையில் சுனில் கவாஸ்கர் இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்றே தெரிவித்தார், டாஸ் வென்ற நீயுசிலாந்து அணி தலைவர் விட்டோரி பேட்டிங் தேர்வு செய்தார். இன்று அவருக்கு கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றி அது மட்டுமே. ஏனெனில் இன்று காலை பயிற்சியில் இடுபட்ட மேக்குல்லாம் காயம் அடைந்தார். இந்திய தரப்பில் முன்னணி வேகபந்து வீச்சாளர் சாகிர் கான் காயம் காரணமாக நீக்கப்பட்டு இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார்.

பேட்டிங்கை தேர்வு செய்த நீயுசிலாந்து அணியால் ஆடுகளம் செல்ல முடியவில்லை காரணம் ஆடுகளம் ஈரமாக இருந்தது. உணவு இடைவேலைக்கு பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நீயுசிலாந்து அணியை தனது அனல் பறக்கும் பந்துகளால் மீரட்ட ஆரம்பித்தார் ஸ்ரீசாந்த். மீரட்டிய ஸ்ரீசாந்த் அத்துடன் நிற்காமல் நீயுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்த ஓவரில் பதம் பார்த்தார்! மார்டின் குப்டில், டிம் மேகின்டோஷ் ஓர் இழக்க ஓட்டங்களில் வெளி ஏறினர்.

இதனை தொடர்ந்து ரோஸ் டெய்லர், கெயின் வில்லியம்சன், டேனியல் விட்டோரி, கரெத் ஹோப்கின்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 82/6 என்ற நிலையில் நியூசிலாந்து தடுமாறியது. இதில் முக்கியத்துவம் முதல் 6 விக்கெட்களை வீழ்த்தியது இந்திய அணியின் இளம் வீரர்களே. அனுபவம் வாய்ந்த பஜ்ஜி தனது சார்பில் ஆறுதலுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

எனவே இதை இளம் வீரர்களின் வெற்றி என்றே கூறவேண்டும்.

ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 148 / 7 என்ற பின்தங்கிய நிலையில் உள்ளது.

 

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

உங்கள் கருத்து

இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் யார்?
 

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2