Thalaippu-news
பதாகை
RSS ஓடை

இசை

இம்மாதம் 17ஆம் தேதி கந்தசாமி ஆடியோ வெளியிடப்படுகிறது. சென்னை டிரேட் சென்டரில் இதற்காக பிரமாண்ட விழா தயாராகி வருகிறது.

தாணு தயாரிப்பில் சுசி. கணேசன் கந்தசாமியை இயக்கியிருக்கிறார். கொக்கரக்கோ என்ற சூப்பர்மேன் கதாபாத்திரம் உட்பட பல வித்தியாசமான வேடங்கள் விக்ரமுக்கு. அவருக்கு ஜோடி ஸ்ரேயா. மிகுந்த பொருட் செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார் தாணு. விக்ரம், ஸ்ரேயா உடைகளுக்கு மட்டும் பல கோடி செலவிடப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ, இத்தாலி போன்ற வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக படத்தை ஸ்பானிஸ் மற்றும் இத்தாலி மொழிகளில் வெளியிடும் வேலைகளும் நடந்து வருகின்றன.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஏப்ரல் 14 பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் தாணு. படத்தில் நடித்திருக்கும் இத்தாலி நடனக் குழுவினரும் அழைக்கப்பட்டிருந்தனர். சன் தொலைக்காட்சியில் விழா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதாக திட்டம்.

சில தொழில்நுட்பக் காரணங்களால் ஏப்ரல் 14 விழாவை நடத்த முடியாமல் போனது. தற்போது தடங்கல்கள் சரியான நிலையில் அதே பிரமாண்டத்துடன், அதே நேரடி ஒளிபரப்பில் சென்னை டிரேட் சென்டரில் 17 ஆம் தேதி விழா நடக்கிறது. இந்த விழாவில் பின்தங்கிய கிராமங்கள் தத்தெடுக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் மாதிரி இருங்கன்னு நிறையப் பேர் சொல்றாங்க. நான் அப்படியெல்லாம் ஆக விரும்பல. நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் அமீர்.

எஸ் எம் ராஜூ தயாரித்து இயக்கியுள்ள வர்ணம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. முதல் சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமீர் பேசியதாவது:

நான் இந்த தியேட்டருக்குள்ள நுழையும்போதே நம்ம பத்திரிகை நண்பர்கள் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. அதுக்கு அர்த்தம் தெரியும். என்னய்யா எந்த விழாவா இருந்தாலும் வந்துடறானேன்னு நினைக்கிறாங்கன்னு எனக்கும் தெரியும்.

சில நண்பர்கள் என்னிடம், 'மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. அதுமாதிரி நீங்களும் இருங்கண்ணே' என்றார்கள்.

மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர எனக்கு ஆசை இல்லை. அதுக்குதான் அவங்க இருக்காங்களே... நான் எதுக்கு காப்பியடிக்கணும். நான் அமீராவே இருக்க ஆசைப்படறேன்.

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவருக்கும் முன்னோடிகள் தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும். ரஜினிகாந்த்-கமலஹாசன் ஆகிய இருவருக்கும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னோடியாக இருந்தார்கள். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி-கமல் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

எங்களை மாதிரி இயக்குநர்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி விழாக்களுக்கு மதித்து கூப்பிடுகிறார்கள் என்றால் என்ன காரணம்... அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பு. இன்னொன்னு கூப்பிட்டா, மதிச்சி வர்றாங்கப்பா என்ற எண்ணம். இந்த சினிமாவுல இதை சம்பாதிச்சு வெச்சிருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க... இன்னொன்னு இந்த மாதிரி விழாக்களில்தான் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க முடியும். உதாரணத்துக்கு, மது அம்பாட் என்ற சிறந்த ஒளிப்பதிவாளரை நான் இந்த நிகழ்ச்சியில்தான் நேரிலேயே பார்த்தேன்..." என்றார் அமீர்

வர்ணம் திரைப்பட பாடல்களை வெகுவாகப் பாராட்டிய அமீர், இப்போது நல்ல கதைகள் இருந்தால், சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் நல்ல வசூல் கிடைக்கும் என்றார்.

இயக்குநர் பாலு மகேந்திரா பேசும்போது, வர்ணம் படப் பாடல்கள் தனது அழியாத கோலங்கள் பட நினைவுகளைக் கிளறிவிட்டதாகக் கூறினார்.

இயக்குநர்கள் எம்.சசிகுமார், சமுத்திரக்கனி, வெங்கட்பிரபு, கவிஞர் நா.முத்துகுமார், நடிகர் சம்பத், நடிகை மோனிகா, ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட், இசையமைப்பாளர் ஐசக்தாமஸ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்கள்.

'வர்ணம்' படத்தின் இயக்குநர் எஸ்.எம்.ராஜு நன்றி கூறினார்.

தொடர்ந்து மூன்று படங்கள் சரியாகப் போகாததால் துவண்டிருக்கும் விஜய் இப்போது பார்த்துப் பார்த்து எடுத்து வரும் படம்வேட்டைக்காரன்.

ஏவிஎம் பாலசுப்ரணியன் தயாரிக்கும் இந்தப் படம் விஜய்யின் 49 வது படம். தெலுங்கு ஹாட் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். அனைத்துப் பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படத்தில் விஜய் அறிமுகப்பாடல் குறித்து ஏக பில்ட் அப் கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அந்தப் பாடல் இன்று இணையதளங்களில் கசிந்து விட்டது.

'வேட்டைக்காரன் பரம்பரைடா...' என்று ஆரம்பமாகும் இந்தப் பாடல், வழக்கமான விஜய் பட பாடல் போலவே அமைந்துள்ளது. குத்தாட்டப் பாடல். இந்த வகைப் பாடல்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய்கூறிவருவதால், அவரது டேஸ்டுக்கேற்ப இந்தப் பாட்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி.

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களும் லீக்...

இந்தப் பாடல் தவிர, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களும் சில தினங்களுக்கு முன் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தப் படம் 25 சதவிகிதம்தான் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொல்ல சொல்ல இனிக்கும் படத்தின் ஆடியோவை பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் வெளியிட்டார். தயாரிப்பாளர், இயக்குநர் மாதேஷ் பெற்றுக் கொண்டார்.

சென்னையில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

இதில், இயக்குநர், திரைக்கதாசிரியர் கலைமணி, நடிகர் ஸ்ரீமன், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி, நவதீப், சுஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முரளி அப்பாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நவ்தீப், சுஜா ஆகியோர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள கருமாரி கந்தசாமியின் 'அழகர் மலை' படத்தின் இசையை நேற்று வெளியிட்டார் கலைஞானி கமல்ஹாசன்.

ஆர்கே, பானு நடிக்க, எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அழகர் மலை', நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமியமும் இசையும் மணக்க மணக்க வரும் படமாகும்.

இந்தப் படத்தின் இசையை இசைஞானி இளையராஜா அமைத்துள்ளார். அத்துடன் ஒரு பாடலுக்கு அவர் இசைஞானியாகவே தோன்றுகிறார்.

கமல்ஹாசனின் ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது.

படத்தின் நாயகன் ஆர்கே, இயக்குநர் எஸ்பி ராஜ்குமார், தயாரிப்பாளர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக இயக்குநர் எஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆர்கே இருவரும் கமல்ஹாசனிடம் வாழ்த்துப் பெற்றனர்.

 

Please login to be able to chat.

விளம்பரம்

ஒரு நிமிடம் கவனியுங்கள்

உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு?

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2