Thalaippu-news
பதாகை
(0 வாக்குகள், சராசரியாக 0 ற்கு 5)

 

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பான உதம்தியோக பூர்வ அறிவிப்பை , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்னும் சில மணிநேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுக்காலை 9.30 மணியிளவில் , ஹைதராபாத்திலிருந்து சித்தூருக்கு அரசவிழாவொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, பயனித்த அவரது ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலைவரை அவருக்கு என்ன நடந்தது? அவருடன் பயனித்தவர்களுக்கு என்னாயிற்று என்பது பற்றி எதுவித உறுதிப்பாட்டையும் தெரிவிக்க முடியாது காவற்துறையும், முதல்வர் அலுவலகமும் திணறியது.

இந்நிலையில் அவர் பயணித்த பாதையில் அடர்ந்த காடுகள் இருந்த காரணத்தினால் தேடுதற் பணியும் சிரமமாக இருந்தது. இராணுவ, விமானப் படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேடுதற் பணியில் முடுக்கிவிடப்படன. ஆயினும் இருள் கவிந்தபின்னர் இப்பணியில் தடங்கல்கள் ஏற்பட்டன.

இன்று காலையில், மீட்புப்பணி மீளசவும் தொடங்கப்பட்ட போது, வெலிகுண்டா மலைப் பிரதேசத்தில் விமானப்படையினர், முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கண்டுபிடித்து உறுதி செய்தனர். ஆயினும் அப்பிரதேசம் அடர்ந்த காட்டுப்பிரதேசமாகவும், மலைப்பிரதேசமாகவும், இருந்த காரணத்தால்,தேடுதற் பணிக் ஹெலிகாப்டர்களை இறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக விமானப்படையின், பாரசூட் கமாண்டோப் படையின் உதவி கோரப்பட்டது.

அப்பிரதேசத்தில் காமோண்டப்படையினர் இறக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, முதல்வர உட்பட அவருடன் பயணம், செய்த இரு அதிகாரிகள், ஹெலிகாப்டர் பைலட்டுக்கள் இருவர் என அனைவரும் இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டது. அடரந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்ட்டுள்ள அவர்களது உடல்கள் தற்போது மீட்டெடுக்கப்ட்டுள்ளன. ஆந்திர முதல்வரின் மரணம் உத்தியோகபூர்வமா அறிவிக்கப்படவிருக்கிறது.

 

 

இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (0)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2