Thalaippu-news
பதாகை
RSS ஓடை

செட்டிநாடு சமையல்

(5 வாக்குகள், சராசரியாக 3.40 ற்கு 5)

தேவையான பொருட்கள்

  • 1. காளிபிளவர் - 1 சின்ன பூ (துருவியது)
  • 2. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  • 3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • 4. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  • 5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 7. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  • 8. உப்பு
  • 9. கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
  • 10. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
  • 11. கோதுமை மாவு - 2 கப்

செய்முறை

  • கோதுமை மவை உப்பு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
  • காளிபிளவர், உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, தூள் வகைகள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, இந்த கலவையை போட்டு நன்றாக வதக்கவும்.
  • காளிபிளவர் பாதி வதங்கியதும், தண்ணீர் தெளித்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.
  • தண்ணீர் சுத்தமாக வற்றி கலவை திக் ஆனதும் எடுக்கவும்.
  • வழக்கமாக சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி, உள்ளே சிறிது காளிபிளவர் கலவை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி போல் (சற்று கனமாக) தேய்த்து, மேலே நெய் தடவி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (நெய்'க்கு பதிலாக எண்ணெயும் தேய்கலாம்)
 
நன்றி : அறுசுவை.காம் 
(1 வாக்கு, சராசரியாக 3.00 ற்கு 5)

தேவையான பொருட்கள்

  • பெரிய பாகற்காய் - இரண்டு
  • சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
  • தக்காளி - இரண்டு
  • பூண்டு - ஐந்து பல்
  • ப. மிளகாய் - இரண்டு
  • மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் - ஒரு டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
  • சோம்புத் தூள் - அரை டீ ஸ்பூன்
  • புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு
  • உப்பு - இரண்டரை டீ ஸ்பூன்
  • எண்ணை - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கடுகு & உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
  • சோம்பு - கால் டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை - இரண்டு கொத்து
  • வெல்லம் - சிறிய கட்டி (ஐந்து கிராம்)

செய்முறை

  • முதலில் பாகற்காயை சற்று கணமான வில்லைகளாக நறுக்கி அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் வைக்கவும்.
  • பூண்டுப் பல்லை தட்டி வைக்கவும்.
  • தக்காளியை நான்காகவும், ப. மிளகாய், வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்
  • புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
  • பாகற்காயை கழுவி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம், பூண்டு, ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, சிவந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • மூன்று நிமிடம் கழித்து காய் கலவையை போட்டு வதக்கவும்.
  • ஐந்து நிமிடம் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.
  • பத்து நிமிடம் நன்கு கொதித்து காயும் நன்றாக வெந்தவுடன் வெல்லம் தட்டிப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
நன்றி : அறுசுவை
(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

தேவையான பொருட்கள்

  • மாங்காய் வத்தல் - 8 துண்டுகள்,
  • சுண்டைக்காய் வத்தல் - 12,
  • சி. வெங்காயம் - 10,
  • பூண்டுபல் - 10,
  • மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
  • கொத்தமல்லிதூள் - 3 டீஸ்பூன்,
  • தேங்காய்துருவல் - 1/4 கப்,
  • கடுகு - 1 டீஸ்பூன்,
  • உ. பருப்பு - 1/2 டீஸ்பூன்,
  • வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்,
  • வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு,
  • கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.

செய்முறை

  • மாங்காய் வத்தலை 15 நிமிடம் சுடுதண்ணீரில் ஊறவிடவும்.
  • தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • சி.வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  • கடுகு, உ. பருப்பு வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • சுண்டைவத்தலை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • மிளகாய்தூள், கொத்தமல்லிதூள் போட்டு வதக்கவும்.
  • புளியை கரைத்து ஊற்றவும்.
  • அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
  • மாங்காய்வத்தல், உப்பு போடவும்.
  • அடுப்பை குறைந்த தணலில் வைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிந்ததும் வெல்லத்தை போட்டு இறக்கவும்.
நன்றி: அறுசுவை.காம்   

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2