Thalaippu-news
பதாகை
RSS ஓடை

இதர மாநிலங்கள்

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

தாய்லாந்தில் நடைபெற உள்ள ஏழாவது இந்திய - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மற்றும் நான்காவது கிழக்கு - ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் நாளை (23ம் தேதி) செல்கிறார்.

தாய்லாந்து நாட்டில், வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஏழாவது இந்திய - தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் நான்காவது கிழக்கு - ஆசிய மாநாடுகள் நடைபெற உள்ளன. உலக பொருளாதார நெருக்கடியை பாதுகாப்பான சூழலில் சமாளிக்க, ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மன்மோகன் சிங், இம்மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது, வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேச உள்ளார். அதே போன்று மற்ற நாட்டு தலைவர்களையும் சந்தித்து, இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து விவாதிப்பார் என

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக கிழக்கு பிரிவுச் செயலர் என்.ரவி கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன பிரதமர் இடையேயான சந்திப்பின் போது, அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். "ஆசியான்' மாநாட்டில், சேவை மற்றும் முதலீட்டு துறையில் தாராள வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்படும். உலக நாடுகள் பலவும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும், ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறு ரவி கூறினார்.

 

(2 வாக்குகள், சராசரியாக 3.50 ற்கு 5)

 

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. கோவா மாநிலம் பனாஜியில் இருந்து டெல்லி செல்லும் கோவா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 5 மணியளவில் உ.பி. மாநிலம் மதுரா அருகே சென்று கொண்டிருந்தது. இதே பாதையில் சில மணி நேரத்துக்கு முன்பு சென்ற மேவார் எக்ஸ்பிரஸ், மதுரா ரயில் நிலையத்துக்கும் பிருந்தாவன் ரயில் நிலையத்துக்கும் இடையே சிக்னல் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கோவா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவர், வண்டியின் வேகத்தை குறைக்காமல் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேவார் எக்ஸ்பிரஸ் மீது கோவா எக்ஸ்பிரஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பல பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து இறங்கின.

குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதும் ரயில்களில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். கோவா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் மோதியதில் மேவார் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த பயணிகள் இருக்கையிலிருந்து குட்டிக்கரணம் அடித்து விழுந்தனர். சிலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இரண்டு ரயில்களிலும் சேர்த்து 15-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பெட்டிகளில் கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு நசுங்கி விட்டன. இதனால் பெட்டிகளுக்குள் ஏராளமான பயணிகள் சிக்கியுள்ளனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள், மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். நொறுங்கிய பெட்டிகளில் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து பயணிகளை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மதுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது. இன்னும் ஏராளமான பயணிகள் பெட்டிகளில் சிக்கியுள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கோவா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, டெல்லி ஆக்ரா வழித்தடத்தில் நிஜாமுதீன், ஆந்திரா, கர்நாடகா, அமிர்தரஸ், மும்பை ராஜதானி மற்றும் ஜபல்பூர்-டெல்லி ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

 

 

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பான உதம்தியோக பூர்வ அறிவிப்பை , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்னும் சில மணிநேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுக்காலை 9.30 மணியிளவில் , ஹைதராபாத்திலிருந்து சித்தூருக்கு அரசவிழாவொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, பயனித்த அவரது ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலைவரை அவருக்கு என்ன நடந்தது? அவருடன் பயனித்தவர்களுக்கு என்னாயிற்று என்பது பற்றி எதுவித உறுதிப்பாட்டையும் தெரிவிக்க முடியாது காவற்துறையும், முதல்வர் அலுவலகமும் திணறியது.

இந்நிலையில் அவர் பயணித்த பாதையில் அடர்ந்த காடுகள் இருந்த காரணத்தினால் தேடுதற் பணியும் சிரமமாக இருந்தது. இராணுவ, விமானப் படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேடுதற் பணியில் முடுக்கிவிடப்படன. ஆயினும் இருள் கவிந்தபின்னர் இப்பணியில் தடங்கல்கள் ஏற்பட்டன.

இன்று காலையில், மீட்புப்பணி மீளசவும் தொடங்கப்பட்ட போது, வெலிகுண்டா மலைப் பிரதேசத்தில் விமானப்படையினர், முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கண்டுபிடித்து உறுதி செய்தனர். ஆயினும் அப்பிரதேசம் அடர்ந்த காட்டுப்பிரதேசமாகவும், மலைப்பிரதேசமாகவும், இருந்த காரணத்தால்,தேடுதற் பணிக் ஹெலிகாப்டர்களை இறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக விமானப்படையின், பாரசூட் கமாண்டோப் படையின் உதவி கோரப்பட்டது.

அப்பிரதேசத்தில் காமோண்டப்படையினர் இறக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, முதல்வர உட்பட அவருடன் பயணம், செய்த இரு அதிகாரிகள், ஹெலிகாப்டர் பைலட்டுக்கள் இருவர் என அனைவரும் இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டது. அடரந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்ட்டுள்ள அவர்களது உடல்கள் தற்போது மீட்டெடுக்கப்ட்டுள்ளன. ஆந்திர முதல்வரின் மரணம் உத்தியோகபூர்வமா அறிவிக்கப்படவிருக்கிறது.

 

 

(19 வாக்குகள், சராசரியாக 3.00 ற்கு 5)
35 மாணவிகளை மயக்கி காமலீலை நடத்திய குமரி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குமரி மாவட்டம் விள வங்கோடு அருகே உள்ள இடைக்கோடு ராமவர்மன் சிறையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 28). எம்.சி.ஏ. படித்துள்ளார். திருவனந்தபுரம் உதியன் குளங்கரையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட கிருஷ்ண குமார் கம்ப்யூட்டர் படிக்க வரும் மாணவிகளி டம் மன்மதன் போல் பழகி வந்துள்ளார். இதனால் மாணவிகள் பலர் அவரது காதல் வலையில் வீழ்ந்தனர்


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் சுமார் 50 கிராமங்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அந்த 50 கிராமங்களும் போலீசார் இல்லாத சுதந்திரமான பகுதி என்றும் அறிவித்தனர். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக உள்ளூர் பழங்குடி இன மக்களும் உள்ளனர்


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2