மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தன. நிஃப்டி 4300 ஐ தாண்டியது.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சரிந்த குறியீட்டு எண்கள், பிறகு படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. அதே நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்து இருந்தது. வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 02.21 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 14,324.01 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.75 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,247.00 ஆக அதிகரித்தது.
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இன்றும் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 குறைந்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 குறைந்தது. லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 918.00/918.25 டாலராக குறைந்தது. பார் வெள்ளியின் விலையும் 13.75/13.76 டாலராக குறைந்தது