
ஏர்டெல் தனது அடையாளத்தை (logo) மாற்றியது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது புதிய அடையாளத்தை நாளைமுதல் ஏற்கவிருக்கிறது. அந்த அடையாளத்தில் சிகப்பு நிறம் மட்டும் மேலோங்கி உள்ளது.
இந்தியாவில், கைபேசி (Cellphone), தொலைபேசி (Land-lin), கம்பியில்லா இணைய சேவை (wireless internet ), இணைய சேவை (internet connection), செயற்கைக்கோள் ஓளிபரப்பு (digital TV) என அனைத்து வகையான தகவல் தொடர்பு சேவைகளை விரிவாக செயல் படுத்தி வருகிறது, ஏற்கனவே, வங்காள தேசம், இலங்கை, இந்தியா என தமது சேவைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றது,
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்ரிக்காவின் "சைன் குழுமம்" (Zain Group) என்ற நிறுவனத்தை கைப்பற்றியது. சைன் குழுமம் ஏற்கனவே தனது சேவையை பதினைத்து நாடுகளில் கொண்டிருந்தது. இந்த நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் தனது கால் தடத்தை மேலும் பதினைந்து நாடுகளில் பதிக்க உள்ளது. உலக அளவில் தமது நிறுவனத்தை வணிகரீதியில் பெருக்கவும் சர்வதேச அளவில் தமது நிலையை மேம்படுத்தவும் தமது அடையாளத்தை புத்துப்பித்துள்ளது.
தனது இணைய தளத்தையும் மாற்றியுள்ளது ஏர்டெல் நிறுவனம். அனால் சிகப்பு நிறத்தை மட்டும் மாற்றவில்லை.
ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 25 ,000 மேற்பட்டோர்கள் வேலைசெய்கிறார்கள். மற்றும் இந்தியாவில் கோடிகளில் புரளும் நிறுவனங்களில் இதும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


