வங்கக் கடலில் வேதாரண்யத்திலிருந்து தென் கிழக்கு திசையில் உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பன் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உதகை : உதகையில் கொய்மலர் சாகுபடியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மலர் ஏல மையம், எதிர்பார்த்தபடி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பலனை அளிக்கவில்லை என தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் கூறினார்.