| முருங்கைக் காய் சூப்
|
| புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:34 |
|
| தேவையானப் பொருட்கள் முருங்கைக்காய் - 3 தக்காளி - 2 வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சோள மாவு எலுமிச்சை பழம் செய்முறை முருங்கைக்காயை நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவிற்கு உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு 2 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி சுமார் 5 நிமிடம் வேக விடவும். நன்கு வெந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் வேகவைத்த காய்கறிகளை போட்டு அதில் உள்ள சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் சூப் பரிமாறுவதற்கு முன்பு சூப்பை சுட வைத்து கொதித்ததும் மேலே கொத்துமல்லி தழை, புதினா மிளகு தூள் தூவவும். பரிமாறும் போது மேலே எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாறவும்.

|
|
| முட்டைகோஸ் சூப்
|
| வியாழக்கிழமை, 11 ஜூன் 2009 11:29 |
|
| சூப் வகைகளை தயாரித்து உடனே சூடாக உண்பது உடலுக்கு சுறுசுறுப்பையும் ஆரோக்யத்தையும் அளிக்கும். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ் 225 கிராம் வெள்ளை பூசணிக்காய் : 225 கிராம் வெங்காயம் : 3 உருளைக்கிழங்கு : 2 சோள மாவு : தேவைக்கேற்ப வெண்ணெய் : 1 தேக்கரண்டி உப்பு, மிளகுத்தூள் : தேவைக்கேற்ப செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெயை போட்டு அடுப்பில் வைத்து, சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவைகளை போட்டு நன்கு வதக்கவும். பிறகு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். நன்கு வெந்ததும், சிறிது சோள மாவை தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றி கிளறி விடவும். சரியான அளவிற்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

|
|
| காலிபிளவர் புட்டு
|
| வியாழக்கிழமை, 11 ஜூன் 2009 11:29 |
|
| காளிபிளவர் என்றாலே தனி ருசிதான். தேவையானப் பொருட்கள் காளிபிளவர் - 1 தேங்காய் துருவல் - 1 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 பூண்டு பற்கள் - 6 கறிவேப்பிலை எண்ணெய் - 100 மில்லி தேவையான அளவு உப்பு செய்முறை காளிபிளவரை சுத்தம் செய்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை, கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். காளிபிளவர் வெந்தவுடன் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும் போட்டு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள காளிபிளவர் கலவையை கொட்டி நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக துருவிய தேங்காயை கொட்டி சுமார் 3 நிமிடங்கள் வறுக்க வேண்டும். பொரபொரப்பான காளிபிளவர் புட்டு கலக்கலாக இருக்கும்.

|
|
| வெஜிடபிள் இட்லி
|
| வெள்ளிக்கிழமை, 05 ஜூன் 2009 10:31 |
|
| சாதாரண இட்லியை சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு வெஜிடபிள் இட்லியை சமைத்துக் கொடுத்துப் பாருங்கள். ருசியாகவும் இருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேவையானவை: இட்லி மாவு - 2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப் தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு உப்பு - ஒரு சிட்டிகை தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள்டீஸ்பூன் இஞ்சி - ஒரு துண்டு பஞ்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - ஒரு சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இல்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
|
|
| முருங்கைப்பூ கூட்டு
|
| வெள்ளிக்கிழமை, 05 ஜூன் 2009 10:31 |
|
| அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரும் முருங்கைப்பூ கூட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள் : முருங்கைப்பூ - 1 கப் சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 2 பாசிப்பருப்பு - கால் கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப சாம்பார் பொடி - முக்கால் டீஸ்பூன் தாளிக்க : எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - அரை டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் -1 கறிவேப்பிலை - 1 ஆர்க்கு செய்முறை : முருங்கைப்பூவை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, அதில் முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு வெந்ததும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில் சேர்க்கவும். முருங்கைப்பூ கூட்டு தயார்.
|
|
|