
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பீட்ரூட் - 1/4 கப் (துருவல்)
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் - தேவையான அளவு
- பீட்ரூட்டை சிறிதளவு நெய்யில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
- 1 கப் பாலை மற்றும் நன்றாக கொதித்தவுடன் அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கரைந்த பின் அதில் வதக்கிய பீட்ரூட்டை போடவும்.
- அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை தூவி பரிமாறலாம்.


