Thalaippu-news
பதாகை
RSS ஓடை

இனிப்புகள்

(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

 

பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பீட்ரூட் - 1/4 கப் (துருவல்)
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் - தேவையான அளவு


 

 

  • பீட்ரூட்டை சிறிதளவு நெய்யில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
  • 1 கப் பாலை மற்றும் நன்றாக கொதித்தவுடன் அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கரைந்த பின் அதில் வதக்கிய பீட்ரூட்டை போடவும்.
  • அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை தூவி பரிமாறலாம்.
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ தயிர் : 1 கப் ஆரோரூட் பவுடர் : 50 கிராம் எலுமிச்சம்பழம் : 1 சிறிது நெய் : 1/2 கிலோ சர்க்கரை : 1/4 கிலோ கு‌ங்கும‌ப் பூ - ‌சி‌றிது செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும். பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ‌வி‌ட்டு காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை, துவாரம் செய்துள்ள துணிக்குள் வைத்து, முறுக்கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும். முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்து எடுத்து, தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். உருளைக்கிழங்கு ஜிலேபி ரெடி.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
பிஸ்கட் விரும்பிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வித்தியாசமான வகைகளிலும் பிளேவர்களிலும் செய்துக்கொள்ளலாம். தேவையான பொருட்கள்: வேர்க்கடலை : 1 கப் கோதுமை மாவு : 1 கப் சர்க்கரை : 1 கப் உப்பு : 1 தே‌க்கர‌ண்டி சமையல் சோடா : 1 தே‌க்கர‌ண்டி எசன்ஸ் : 1/2 தே‌க்கர‌ண்டி நெய் : 2 தே‌க்கர‌ண்டி செய்முறை: வறுத்து, பொடித்த வேர்க்கடலை மற்றும் சர்க்கரை, கோதுமை மாவு அனைத்தையும் எடுத்துக்கொண்டு உப்பும், சமையல் சோடாவும் சே‌ர்‌த்து த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும். அடுத்து அந்த மாவை பூரி போல் உருட்டித் தட்டி, சிறிய வட்டமாக வெட்டி, அலங்கரிக்க ஊசியால் அதன் மேலே சிறு புள்ளிகளைக் குத்த வேண்டும். பிறகு ஒரு தட்டில் நன்றாக நெய் தடவி ஒன்றின் மேல் ஒன்று ஒட்டாதவாறு இடைவெளி விட்டுப் போட வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மணல் போட்டு மெல்லிய தட்டு போட்டு மூடி, நன்றாக ஆவி வரும் வரை ஓவனில் வைத்து பிஸ்கட் தட்டை வைத்து மூட வேண்டும். பதினைந்து நிமிட நேரத்துக்குள் அந்த பிஸ்கட்டை திருப்பி போட வேண்டும் (பிஸ்கட் பிரவுன் கலராக வரும் போது திருப்பவும்). வெந்ததும் எடுத்து ஆற வைத்துச் சாப்பிடவும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
கோடை காலத்தில் வாழைப்பழ பாயாசம் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் ருசியாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: அரிசி : 100 கிராம் சர்க்கரை : 200 கிராம் தேங்காய் : 1/2 ஏலக்காய் : 5 முந்திரி : 1 லிருந்து 12 மஞ்சள் வாழைப்பழம் : 2 (மிக சிறிய துண்டாக நறுக்கியது) செய்முறை: அரிசியை நன்றாக சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியையும் தேங்காயையும் மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி, தேங்காய் கலவை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிக சிறியதாக எரியவிடவும். மாவு பிரியாமல் சேர்த்து கொதித்து அரிசி கலவை நன்றாக வேக வேண்டும். எல்லாம் சேர்ந்து கொதித்தபின் வாழைப்பழத்தை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும். நெ ய்யில் வறுத்த முந்திரியையும், ஏலக்காய் தூளையும் போட்டு இறக்கவும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
மைக்ரோவேவில் கேரட் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோமா? தேவையானப் பொருட்கள் 1/4 கிலோ கேரட் 1 கப் சர்க்கரை 3 தே‌க்கர‌ண்டி நெய் 1 கப் தண்ணீர் ஒரு சிட்டிகை கேசரி பொடி 4 ஏலக்காய் 10 வறுத்த முந்திரி செய்முறை கேரட்டை துருவிக்கொள்ளுங்கள். ஏலக்காயை பொடி செய்துகொள்ளுங்கள். பவுல் அடியில் நெய் தடவிக்கொள்ளுங்கள். துருவிய கேரட், ஏலக்காய் பொடி, சர்க்கரை, தண்ணீர், கேசரி பொடி, முந்திரி, நெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் பவுல்-ல் 10 நிமிடம் high(HI)-யில் வைக்கவும். இடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும். மைக்ரோவேவ் கேரட் அல்வா ரெடி. ஒவ்வொரு மைக்ரோவேவிற்கும் நேரம் வித்தியாசப்படலாம், ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தால் சரியாக வரும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2