2905
(0 வாக்குகள், சராசரியாக 0 ற்கு 5)
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:43
தேவையான பொருட்கள்: மீன் : 500 கிராம் ரொட்டி : 2 ஸ்லைஸ் எலுமிச்சம்பழம் : 1/4 பச்சை மிளகாய் : 5 கிராம் வெங்காயம் : 200 கிராம் முட்டை : 1 உப்பு : தேவையான அளவு எண்ணெய் : வறுக்க தேவையான அளவு வெள்ளரிக்காய் : 30 கிராம் தக்காளி : 50 கிராம் கருவேப்பிலை : கொஞ்சம் பிரட் தூள் - சிறிதளவு செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து வேக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரட் ஸ்லைஸை தண்ணீரில் முக்கி, நன்கு பிழிந்து கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் பிரட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெந்த மீன், எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு போட்டு கட்லெட்டுகள் செய்து கொள்ளவும். முட்டையில் சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். கட்லெட்டை முட்டையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்கு வறுபட்டவுடன் இறக்கவும். வறுபட்ட கட்லெட்டை வட்டமாக சீவிய வெள்ளரிக்காய், தக்காளியுடன், கறிவேப்பிலையும் வைத்து அலங்கரிக்கவும்.
இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!எடுத்துக்காட்டு :