திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2012 02:34
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான தக்காளி இறால் மசாலா சமைப்பது எப்படி? சமைத்துப் பாருங்கள். ருசித்துப் பாருங்கள். தேவையான பொருட்கள்: தக்காளி - 200 கிராம் வெங்காயம் - 200 கிராம் இறால் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 குழிக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை அரிந்து வையுங்கள். இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். கலவை நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த இறாலைப் போட்டுக் கிளறி இறக்குங்கள். தக்காளி இறால் மசாலா ரெடி.