Thalaippu-news
பதாகை
RSS ஓடை

உணவுகள்

(3 வாக்குகள், சராசரியாக 2.33 ற்கு 5)

 

தானியக் கஞ்சி

 

 

 

 

 

தேவையானவை:

கோதுமை - 100 கிராம்
கொள்ளு - 1 டீஸ்பூன்
கேழ்வரகு, சோளம் - தலா ஒரு கப்
சிகப்பு அரிசி, கம்பு, திணை - தலா 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 6 டேபிள்ஸ்பூன்
பொட்டுகடலை - ஒரு சிறிய கப்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 10
பால் - 200 மிலி

செய்முறை

தானியங்கள் மற்றும் பருப்புகளை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகக் கலந்து மெஷினில் அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன், பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

6 டீஸ்பூன் மாவில், இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.

இதனை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

மணம் வந்ததும், காய்ச்சிய பாலை அதில் விட்டு, பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

இது உடம்பிற்கு மிகவும் நல்லது.

 

(2 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

தாமரைத்தண்டு - பேபிகார்ன் மஞ்சூரியன் சுலப முறை

 

 

 

 

 

தேவையானவை:

தாமரைத் தண்டுகள் - 1கப்
பேபிகார்ன் துண்டுகள் - 1கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பூண்டு பல் - 10
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
நறுக்கிய குடமிளகாய் - தேவையான அளவு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்னையும் மெல்லியதாக நறுக்கி தனித்தனியே உப்பு, சர்க்கரை தூவி கிளறவும்.

சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனித்தனியே பொரித்தெடுக்கவும்.

இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தாள், பூண்டு, வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

வற்றலை எண்ணெயில் போட்டு கார்ன்ப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.

அடுப்பை அதிக தீயில் வைத்துக் கிளறி, பொரித்து வைத்திருக்கும் தாமரைத்தண்டு மற்றும் பேபிகார்ன் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.

இது சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

 

 

(3 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

அடை தோசை

தேவையான பொருட்கள்:

ஊறவைக்க (குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும்)

புழுங்கள் அரிசி - 200கி
கடலை பருப்பு - 100கி
௨ளுந்து - 50 கி

அரைக்க

பூண்டு - தேவைகேற்ப
வத்தல் - தேவைகேற்ப


கறிமசால் தூள்
தேங்காய் தேவைகேற்ப பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை

செய்முறை

அரிசி, கடலை பருப்பு, ௨ளுந்து ஆகியவற்றை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துகொள்ளவும்.

அதில் பூண்டு மற்றும் வத்தலை போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைக்கவும்.

மாவில் தேவையான அளவு கறிமசால் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து தோசையாக வார்த்து எடுக்கவும்.



இது சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்ற ௨ணவாகும்.

வெல்லம் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

 

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2