பதாகை
மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
தே‌னி‌ன் ‌சிற‌ப்பு‌த் த‌ன்மை
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:43   
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழைய பயப்படும். எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு தே‌க்கர‌ண்டி முதல் மூன்று தே‌க்கர‌ண்டி வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர் வரை தேனை உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
தேனை எ‌ல்லோரு‌‌ம் சா‌ப்‌பிடலா‌ம்
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:43   
மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும் எ‌ன்பதா‌ல்தா‌ன். மரு‌ந்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும் தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
மூளையின் சீரான இயக்கத்திற்கு...
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:43   
நாம் உறங்கும்போதும் கூட விழித்துக் கொண்டு 24 மணி நேரமும் தனது பணியை மூளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மூளையின் செயல்பாடு சீராக இருப்பது தான் நமது உடலுக்கு நல்லது. மனித மூளை 1.5 கிலோ எடை கொண்டது. உடலின் அனைத்து இயக்கங்களும் மூளையின் உத்தரவுப்படியே நடக்கின்றன. நாம் சிந்திப்பது, பேசுவது, ஓடுவது, உண்பது, மகிழ்ச்சி, வருத்தம் என அனைத்தும் மூளையின் உத்தரப்படி தான் நடக்கிறது. கரு உற்பத்தியான 2வது வாரத்தில் மூளை தோன்றிவிடுகிறது. 3 மாத கருவின் மொத்த எடையில் பாதி, மூளையின் எடையாக இருக்கும். உடலின் எந்தவொரு உறுப்பும் பாதிக்கப்பட்டால், மருத்துவம் மூலம் அதை குணப்படுத்துகிறோம். மூளையின் திறன் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். மூளை செயலிழந்துவிட்டால் இறப்பைத் தான் சந்திக்க வேண்டும். உடலின் மொத்த எடையில் 40-ல் ஒரு பங்குள்ள மூளைக்கு, உடலில் ஓடும் ரத்தத்தில் 5-ல் ஒரு பங்கு தேவைப்படுகிறது.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
டீ‌யினா‌ல் இதய‌த்‌தி‌ற்கு ஆரோ‌க்‌கிய‌ம்
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:43   
டீ குடி‌த்தா‌ல்தா‌ன் நம‌க்கு பெரு‌ம்பாலு‌ம் பொழுதே ‌விடியு‌‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்ட டீ ப‌ற்‌றிய ஒரு ந‌ல்ல தகவ‌ல் இ‌ங்கே. தினமும் டீ குடித்து வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டீ குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்கனவே பல ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. இதற்கிடையில், பிரிட்டன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் மேற்படி இ‌ந்த உ‌ற்சாகமான தகவல் தெரிய வந்துள்ளது. தினமும் 3 கோப்பையோ அல்லது அதற்கு மேலோ டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 70 சதவீதம் குறைவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் கேரி ரக்ஸ்டன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். டீ குடிப்பதா‌ல் கோப உணர்ச்சியும், மன அழுத்தமும் கட்டுப்படுகிறது. மேலும், இதயத்தில் ரத்தக்கட்டு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ரத்தம் செல்லக்கூடிய குழாய்கள் தூண்டப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இதனால்தான், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன என்று ர‌க்‌‌ஸ்ட‌ன் தெரிவித்தார்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
இ‌ஞ்‌சி‌யி‌ன் மரு‌த்துவ பய‌ன்
வியாழக்கிழமை, 11 ஜூன் 2009 11:40   
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும். இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 7

விளம்பரம்