வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21
அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது. அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதிரி? காலேஜ் ஸ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தைரியமான கேரக்டர். இந்த கேரக்டரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.