பதாகை
நட்சத்திர பேட்டி
தமிழ் ரசிகர்க‌ள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள் - போர்க்களம் இயக்குனர்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 19:51   
கல்லூ‌ரிக்கு செல்லும் டீன் ஏ‌ஜ் பையன் போலிருக்கிறார் பண்டி சரோ‌ஜ்குமார். அவரது பயோடேட்டாவை கேட்டால் ஆச்ச‌ரியமாக இருக்கிறது. கண்களில் ஆர்வமும், வேலையில் சுறுசுறுப்புமாக இருக்கும் அவரது உற்சாகமான பேட்டியிலிருந்து... அது என்ன பண்டி சரோ‌ஜ்குமார்? தமிழில் இதுவரை கேள்விப்படாத பெயர்...? என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. தெலுங்கு குடும்பம். பண்டி என்பது குடும்பப் பெயர். சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம். தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூ‌ரியில் இயக்குனர் பயிற்சி படித்தேன். உங்கள் வயது..? இப்போதுதான் 24 ஆகிறது. படம் இயக்குவது என்று முடிவான பிறகு தெலுங்குக்கு போகாமல் தமிழுக்கு வர என்ன காரணம்? தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்.






முழு செய்தியை படிக்க
 
பாரதிராஜா, பாலசந்தருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் - கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
பாரதிராஜா, பாலசந்தர் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழியின் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ். விரைவில் வெளிவரயிருக்கும் புகைப்படம் படத்துக்கும் இவரே கலை இயக்கம். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடன் பணிபுரிந்தது த்ரில்லிங்கான அனுபவம் என்று கூறும் அவருடன் ஒரு நேர்காணல். பாடல் காட்சிகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் அமைக்கப்படும் பிரமாண்ட அரங்குகளை வைத்தே ஒரு கலை இயக்குனரின் திறமை மதிப்பிடப்படுகிறது. இது சரியா? நிச்சயமாக சரி கிடையாது. கதைக்கு எது தேவையோ அதற்கு மீறாமல் கலை இயக்கம் இருப்பதுதான் சரியானது. புகைப்படத்தின் ஸ்பெ­ஷல் என்ன? இந்தப் படத்தில் இன்ஜினியரிங் காலேஜ் ஒன்றின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களை உருவாக்கியிருக்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மயானம் ஒன்றை செம்பரம்பாக்கம் ஏரி அருகில் அமைத்தோம். ரொம்ப தத்ரூபமாக அந்தக் காட்சி வந்திருக்கிறது.






முழு செய்தியை படிக்க
 
வாமனன் ஜெய்க்கு திருப்புமுனை படம் - இயக்குனர் அகமது
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒரு படம் மட்டும் நன்றாக ஓடும் என்று நடிகர் ஜெய் கூறியது நினைவிருக்கிறதா? அந்த ஒரு படம், வாமனன். அறிமுக இயக்குனர் அகமது இயக்குகிறார். சென்னை 600028, சுப்பிரமணியபுரம் படங்களில் நடித்த ஜெய் தனி ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் இது. அறிமுக இயக்குனர் என்றாலும் அகமதுவின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தெறிக்கிறது. உங்களைப் பற்றி சொல்லுங்கள்... சென்னை லயோலா காலே‌ஜில் விஷூவல் கம்யூனிக்கேஷன் ஸ்டூடண்ட் நான். அப்புறம் டைரக்டர் கதி‌ரிடம் அசிஸ்டெண்டா சேர்ந்தேன். அவருடன் காதலர் தினம் படத்தில் வொர்க் பண்ணியிருக்கேன். வாமனன் எனக்கு முதல் படம். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தயா‌ரிக்கிற ட்‌ரீம் வேலி கார்ப்பரேஷன் வாமனனை தயா‌ரிக்கிறது.






முழு செய்தியை படிக்க
 
ஆர்யா, த்‌ரிஷா கெமிஸ்ட்‌ரி.... – விஷ்ணுவர்தன்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
நம்பிக்கையளிக்கும் இளம் இயக்குனர்களில் விஷ்ணுவர்தனும் ஒருவர். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா என இவரது கே‌ரியர் கிராஃப் கிராண்டானது. விஷ்ணுவர்தன் படம் இப்படி‌த்தான் இருக்கும் என்ற சட்டத்தை சர்வம் உடைக்கும் என்கிறார் உறுதியாக. தனக்கென தனி இமே‌ஜ் உருவாவதை தகர்க்கும் இவரது முனைப்பு தமிழ் சினிமா மீதான எதிர்பார்ப்பை அதிக‌ரிக்கிறது. விரைவில் வெளிவரயிருக்கும் தனது சர்வம் குறித்து உற்சாகமாக உரையாடுகிறார் விஷ்ணுவர்தன். சர்வம் படத்தின் கதை என்ன? எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் வாழ்க்கை ஒரு நொடியில் மாறி சர்வமும் மாறிவிடுவதை பார்க்கிறோம். இதுதான் சர்வம் படத்தின் ஒருவ‌ரி கதை. இந்தக் கதையை ஐந்து கதாபாத்திரங்களை வைத்து சொல்லியிருக்கிறேன்.






முழு செய்தியை படிக்க
 
கனவு பலித்தது - தமன்னா
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21   
அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது. அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதி‌ரி? காலே‌ஜ் ஸ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தை‌ரியமான கேரக்டர். இந்த கேரக்ட‌ரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.






முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 5

விளம்பரம்