வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:21
ராஜாதிராஜா என பெயர் வைத்து ரஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்சரிப்பு முதல் உடலசைவு வரை அனைத்திலும் ரஜினி... ரஜினி... கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தாஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.