Thalaippu-Cinema
பதாகை
RSS ஓடை

விமர்சனம்

(4 வாக்குகள், சராசரியாக 4.75 ற்கு 5)

 

படம்: தி சோசியல் நெட்வொர்க் (The Social Network.)

மொழி: ஆங்கிலம்

இயக்குனர் : டேவிட் பின்செர்

எழுத்து : ஆரோன் சோர்கின் (திரைக்கதை), பெண் மேஸ்டிச் (புத்தகம்)

நட்சத்திரங்கள்:ஜெஸ்சி எய்சென்பேர்க், அன்டுரு கார்பில்டு மற்றும் ஜஸ்டின் டிம்பர்லேக்

கதை கரு: ஒரு இளம் கோடீஸ்வரனை உருவாக்கிய சமுக வளையமைப்பு உருவான கதை !!

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் மார்க் சுக்கேர்பெர்க், கணினி மென்பொருள் வல்லுநர் தனது நுண்ணிய அறிவு திறனால் வலையமைப்பு ஒன்றை உருவாகுகிறார் , அதன் பெயர் தான் "பேஸ்புக் (FaceBook)". மைக்ரோ - வலைபதிவில் மோகம் மற்றும் நிரலாக்க தொழில்நுட்பமும் இணைந்து இந்த வலையமைப்பை தொலைதொடர்பு மற்றும் சமுக வலையமைப்பு துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த வலையமைப்பு மார்க் சுக்கேர்பெர்க்கிற்கு , ஐம்பது கோடிக்கும் அதிகமான நண்பர்கள் மற்றும் இளம் கோடீஸ்வரன் எனும் பட்டதை பெற்றுத்தருகிறது வெறும் ஆறு வருடங்களில் என்றால் அது கண்டிப்பாக குறுகிய ஒரு காலகட்டமே என்பதில் ஐயமில்லை. இந்த மிகபெரும் வெற்றி அவர் வாழ்வில் கொடுக்கும் இன்னல்கள் மற்றும் அவைகளை அவர் வெற்றி கொள்ளவதே மீதி கதை.

உலகில் இணைய தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பேஸ்புக் இணைய தளத்தை உருவாக்கியவரைப் பற்றிய கதை. இணையதளத்தில் மட்டும் அல்ல வெள்ளித்திரையிலும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு லாபம் கிடைக்குமா எனபது போகப் போக தான் தெரியும்.

 

பத்து இயக்குனர்கள் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்ற விளம்பர வாசகங்களுடன் வெளிவந்திருக்கிறது இராசு மதுரவனின் மாயாண்டி குடும்பத்தார். காதல், பாசம், வீரம், துரோகம், பொறாமை, கோபம் என அனைத்தும் கலந்து காவியமாக மணக்கிறது இந்த கிராமத்து கதம்பம். அண்ணன், தம்பி குடும்பத்தின் சொத்து தகராறு என்ற மெல்லிய இழைதான் கதை. அதில் இராசு மதுரவன் தொடுத்திருக்கும் சரம், சில நேரம் கண்ணில் நீரை வரவழைக்கிறது, சில நேரம் சி‌ரிப்பில் வயிறை குலுங்க வைக்கிறது. மாயாண்டியாக வரும் மணிவண்ணன் குடும்பத் தலைவர். நடிப்பிலும் இவரே தலைவர். மகன் தருண்கோபியின் படிப்புக்காக கண்ணீர்விட்டு கதறும்போது நம்மையும் கலங்கடிக்கிறார். மாயாண்டி மணிவண்ணனுக்கு மைல் கல். தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பி‌ரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. சேரனின் இரண்டாவது அவதாரம்போல் எப்போதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருப்பது ஏனோ?


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
நடிகர்கள்: விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சந்தானம், கிஷோர், ஷாயாஜி ஷிண்டே, லால்ஒளிப்பதிவு: ப்ரியன்இசை: மணி ஷர்மாஇணை தயாரிப்பு: ஸ்ரேயா ரெட்டிதயாரிப்பு: ஜிகே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணாஇயக்கம்: சபா அய்யப்பன்மக்கள் தொடர்பு: நிகில் முருகன்சத்யம் சறுக்கலைச் சரிகட்ட விஷால் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியதாகச் சொன்ன படம் தோரணை.சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி சென்னை வந்துவிட்ட






முழு செய்தியை படிக்க
2003 ஆண்டு வெளியான அலெஜான்ரோ கொன்சலஸ் இனா‌ரித்து இயக்கிய 21 கிராம்ஸ் சாயலில் வெளிவந்திருக்கிறது விஷ்ணுவர்தனின் சர்வம். ஆர்யா இளம் ஆர்க்கிடெக்‌ட். அவருக்கு த்‌ரிஷா மீது கண்டதும் காதல். த்‌ரிஷா ஒரு டாக்டர். இந்த காதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இந்திர‌ஜித்தையும் அவரது ஆறு வயது மகனையும் வெறியுடன் துரத்துகிறார் ஜே.டி. சக்ரவர்த்தி. இந்திர‌ஜித்தின் மகனை கொலை செய்யவே இந்த துரத்தல். சக்ரவர்த்தியின் மனைவியும், மகனும் இந்திர‌ஜித்தின் கவனக் குறைவால் விபத்தில் இறந்து போகிறார்கள். மகனை இழந்த வலியை இந்திர‌ஜித்தும் அனுபவிக்க வேண்டும். அதற்கு அவரது மகனை கொலை செய்ய வேண்டும்.






முழு செய்தியை படிக்க
ராஜா‌திராஜா என பெயர் வைத்து ர‌ஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்ச‌ரிப்பு முதல் உடலசைவு வரை அனைத்திலும் ர‌ஜினி... ர‌ஜினி... கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெ‌ரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தா‌ஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.






முழு செய்தியை படிக்க
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2