2350
(0 வாக்குகள், சராசரியாக 0 ற்கு 5)
திங்கட்கிழமை, 15 ஜூன் 2009 10:50
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம் மாசிலாமணி. சன் பிக்சர்ஸின் முதல் படமான காதலில் விழுந்தேனில் நடித்திருந்த நகுல், சுனேனா ஜோடியே இதிலும் நடித்துள்ளது. மாசிலாமணியை இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். புன்னகை பூவே, தென்னவன், கண்ணுக்கு கண்ணாக, புதுமைப்பித்தன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இயக்குனராக மாசிலாமணி முதல் படம். குப்பத்து இளைஞனான நகுல், கலாஷேத்ராவில் நடனம் பயிலும் சுனேனா மீது ஆசைப்படுகிறார். தனது காதலை அவர் எப்படி வெளிப்படுத்தி சுனேனா மனதில் இடம்பிடிக்கிறார் என்பதே கதை. பழைய கதைபோல் இருக்கிறதே என்ற கேள்விக்கு, எல்லா கதையுமே ஏற்கனவே வந்த கதைதான், புதுசு என்று எதுவுமில்லை. ஆனால், அதை சொல்லும் விதத்தில் புதுமையை புகுத்தியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஓடியோடி விளையாட வாடா... நீ ஓடிப்போகலாகாது வாடா.. என்ற பாடல் நாக்க முக்க அளவுக்கு ஹிட்டாகும் என்கிறது பட யூனிட். நா. முத்துக்குமார், பா. விஜய், விவேகா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!எடுத்துக்காட்டு :