பதாகை
முன்னோட்டம்
மாசிலாமணி
திங்கட்கிழமை, 15 ஜூன் 2009 10:50   
கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரிக்க சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம் மாசிலாமணி. சன் பிக்சர்ஸின் முதல் படமான காதலில் விழுந்தேனில் நடித்திருந்த நகுல், சுனேனா ஜோடியே இதிலும் நடித்துள்ளது. மாசிலாமணியை இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். புன்னகை பூவே, தென்னவன், கண்ணுக்கு கண்ணாக, புதுமைப்பித்தன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இயக்குனராக மாசிலாமணி முதல் படம். குப்பத்து இளைஞனான நகுல், கலாஷேத்ராவில் நடனம் பயிலும் சுனேனா மீது ஆசைப்படுகிறார். தனது காதலை அவர் எப்படி வெளிப்படுத்தி சுனேனா மனதில் இடம்பிடிக்கிறார் என்பதே கதை. பழைய கதைபோல் இருக்கிறதே என்ற கேள்விக்கு, எல்லா கதையுமே ஏற்கனவே வந்த கதைதான், புதுசு என்று எதுவுமில்லை. ஆனால், அதை சொல்லும் விதத்தில் புதுமையை புகுத்தியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஓடியோடி விளையாட வாடா... நீ ஓடிப்போகலாகாது வாடா.. என்ற பாடல் நாக்க முக்க அளவுக்கு ஹிட்டாகும் என்கிறது பட யூனிட். நா. முத்துக்குமார், பா. விஜய், விவேகா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
தோரணை
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:23   
‌ஜி.வி. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயா‌ரித்திருக்கும் படம் தோரணை. இணை தயா‌ரிப்பு விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி. சத்யம் தோல்விக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் இது. சபா ஐயப்பன் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனராக இது அவருக்கு முதல் படம். அண்ணனைத் தேடி ஊருக்கு வரும் தம்பி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை. கூடவே இனிமையான காதல் கதை ஒன்றும் படத்தில் இருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஸ்ரேயா. இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.






முழு செய்தியை படிக்க
 
ராஜாதிராஜா
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:23   
ரஜினிகாந்த் நடித்த பழைய படத்தின் பெயர் என்றாலும் சூப்பர் ஸ்டாரின் ராஜாதிராஜாவுக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தனது சினிமா பாரடைஸ் சார்பில் ராஜாதிராஜாவை தயாரித்து இயக்கியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் படத்தின் ஹீரோ. படத்தின் ஹைலைட் சமாச்சாரம் என்று பார்த்தால் அது ஹீரோயின்கள். ஸ்னிக்தா, மும்தாஜ், காம்னா, மீனாட்சி நடித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவரே வில்லி என்பது சுவாரஸியமான திருப்பம். கத்தாள கண்ணால பாடலுக்கு ஆடிய ஸ்னிக்தாவுக்கே படத்தில் அதிக காட்சிகள் என்கின்றன தகவல்கள். மும்தாஜ் வில்லியாக நடித்திருக்கிறார். இதற்காக அவர் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சியை எடுத்திருக்கிறார் ­ஷ‌க்தி சிதம்பரம்.






முழு செய்தியை படிக்க
 
பிரம்மதேவா
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:23   
வரும் 14ஆம் தேதி பிரம்மதேவா திரைக்கு வருகிறது. கட்டுவிரியன் படத்தில் நடித்த டாக்டர் ராம் தான் படத்தின் ஹீரோ. இவர் உண்மையாகவே எம்பிபிஎஸ் படித்த டாக்டர். நோயாளிகளின் பல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் கலை ஆர்வத்தில் படத்தில் நடிக்க வந்திருக்கிறார். இவரை மேக்கப் போட வைத்தது இயக்குனர் வி.எஸ்.தர்மலிங்கா சொன்ன கதைதானாம். பிரம்மதேவாவில் ராமுக்கு இரண்டு வேடங்கள். 16 வயதினிலே கமல் மாதிரி ஒரு கதாபாத்திரம். ரொம்ப மெனக்கெட்டு அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன், கண்டிப்பாக பேசப்படும் என்றார் ராம்.






முழு செய்தியை படிக்க
 
மெய்ப்பொருள்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:23   
முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் மெய்ப்பொருளாகவே இருக்கும். சான்பிரான்சிஸ்கோ கடற்கரைப் பகுதியில் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மோகமுள் படத்தை தயாரித்த டி.என்.ஜானகிராமனின் ஜெ.ஆர்.ஆர்ட்ஸ் வழங்க, ட்ரீம் ஆன் பிரேம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது. இவரது மகன் நட்டிகுமார், கிரிஸ்பாலா என்பவருடன் இணைந்து படத்தை இயக்கியுள்ளார். கிரிஸ்பாலா நரம்பியல் நிபுணராக படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துமிருக்கிறார். க்ரைம் த்ரில்லரான இதற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் பல ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்திருக்கும் கிரிஸ்எல்ரிட்ஜ். ஜான் மாஸே இசை. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர். பி.லெனின் எடிட்டிங். கிரிஸ்பாலாவின் மனைவியாக அனுஷா நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு பத்திரிகை நிருபர் வேடம். ஹாலிவுட்டுக்கு இணையாக படத்தை தயாரித்திருப்பதாக கூறியிருக்கிறார் நட்டிகுமார்.






முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 5

விளம்பரம்