
எந்திரனின் பிரம்மாண்ட உலகளாவிய வெற்றிக்கு பிறகு மீண்டும் ஷங்கர் - கலாநிதி மாறன் - ரஜினி கூட்டணி இணைகிறது. மேலும் இதில் மற்றுமொரு பிரம்மாண்டம் இணைகிறது.
பிரம்மாண்டம்... பிரம்மாண்டம்... பிரம்மாண்டம்...
ஏற்கனவே மூன்று பிரம்மாண்டங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது அது என்ன நான்காவது பிரம்மாண்டம் என்று எண்ணுகிறீர்களா அது தான் கமலஹாசன். ஆமாம் இப்பொழுது எந்திரனையும் விஞ்சும் வகையில் ஷங்கர் - கலாநிதி மாறன் - ரஜினி கூடுதலாக கமலஹசனும் இணைகிறார்.
தற்போது ஷங்கர் 3 இடியட்ஸ் மறுபதிப்பு வேளையில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளார், இப்படத்தில் விஜய் மற்றும் ஜீவா இணைவது உறுதியாகி உள்ளது , ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
3 இடியட்ஸ் திரைப்படம் முடிந்த பிறகு கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சாதரணமாக அல்ல ரூபாய் 500 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை பிரம்மாண்டத்தின் மறுபெயர் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். இதில் திரையுல இரு துருவங்கள் ( நடிப்பில் மட்டும்) ரஜினி-கமல் இணைய உள்ளனர். இது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது மேலும் இந்தியாவின் அனேகமாக ஆசியாவின் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக அமைய விருக்கிறது.
மேலும் சுமார் 30 வருடங்களுக்குப்பிறகு கமல் ரஜினி இணையும் படம் இதுவாகத்தான் இருக்கும். கமலும் ரஜினியும் சினிமா வாழ்க்கையில் இரு துருவங்களாக இருந்தாலும் பொது வாழ்க்கையில் மிகச்சிறந்த நட்புணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். கமலுக்கென்று தனி கூட்டமும் ரஜினிக்கென்று தனி கூட்டவும் உள்ளது. மேலும் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இதுவரை அதாவது கடந்த 30 வருடங்களாக இல்லை இந்த கனவு தற்போது இந்த படத்தின் மூலமாக நிறைவேறவிருக்கிறது.


