Thalaippu-Cinema
பதாகை

செய்திகள்

(3 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

1995 ஆம் ஆண்டு தொடங்கி 1997 வரை தொடர்ந்து இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடத்தி சுமார் 200 மில்லியன் டாலர் பணத்தை இறைத்து கட்டியது தான் டைட்டானிக் திரைப்படமாகும். அதே வருடம் வெளியாகி சுமார் 1850 மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டித்தந்தது இந்த திரைப்படம்.

ஹாலிவுட் திரையுலகில் மட்டும் ஆல் உலகில் இந்தியா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. இவ்வவளவு பெரிய பிரம்மாண்டமான கப்பலை யாரும் இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் இத்திரைப்படத்திற்கு மவுசு மேலும் கூடியது.

அது மட்டும் அல்லது இத்திரைப்படம் விருதுகளையும் வாரிக்குவித்தது. 14 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை தட்டிச்சென்றது. அந்த ஆண்டில் டைட்டானிக் பெறாத விருதே இல்லை எனலாம்.

இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron). இவர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய அவதார் (Avatar) திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

இப்பொழுது மேலும் ஒரு கூடுதல் மகிழ்ச்சியான நமக்கு, அதாவது வரும் 2012 மத்தியில் டைட்டானிக் திரைப்படத்தின் 3டி பதிப்பு வெளிவருகிறது என்பது தான் அது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் கூறும் போது " திரை உலகின் மிகப்பெரும் படைப்பான டைட்டானிக் திரைப்படத்தை இப்பொழுது 3டி பதிப்பாக மாற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் 2012 மத்தியுள் இத்திரைப்படத்தின் 3டி பதிப்பை வெளியிட இருக்கிறோம். மேலும் அவதார் (Avatar) திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவதார்-2 (Avatar-2) தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளோம். அவதார்-2 (Avatar-2) திரைப்படம் 2014 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், மேலும் அவதார்-3 (Avatar-3) 2015 -ஆம் ஆண்டு இறுதில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்" எண்டு கூறினார்.

மீண்டும் ஒரு திரைப்புராட்சி ஏற்ப்படவிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

(4 வாக்குகள், சராசரியாக 4.00 ற்கு 5)

 

தமிழில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் விரல்விட்டு என்னக்கூடியதில் முதல் மூன்று விரல்களில் பிடிபட்டுவிடுவார் நமது அபிமான மணிரத்னம் அவர்கள். பகல் நிலவு படத்தில் தனது வெற்றிக்கணக்கை தொடர்ந்த அவர் சற்று முன் வெளியான ராவணனில் சிறிது எதிர்பாராமல் வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தார். மேலும் இதற்கு முந்தைய ஆயுத எழுத்து, இருவர் என வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தாலும் அனைத்து படங்களுமே வருங்கால இயக்குனராகும் கனவோடு திரியும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக கருதப்படும் அளவுக்கு மிகச்சிறந்த திரைக்காவியங்கலாக இருக்கிறது. மேலும் இவர் இயக்கிய அஞ்சலி, ரோஜா, மௌன ராகம், நாயகன், அலைபாயுதே என வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக அதிகம், இவரின் படங்களினால் மக்களின் இதயங்களை மிக எளிதில் கட்டிவிடுவார்.

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக விளங்கும் எ.ஆர். ரஹ்மான் இவரது சீடர் என்பது கூடுதல் அங்கீகாரம். எந்த படத்தை எடுத்தாலும் அதனை மிக கவனத்தோடும் வெறியோடும் கடின உழைப்போடும் தான் முடிப்பார். ராவணன் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்க இரவு பகலாக உழைத்து அதனால் இதயவலி ஏற்பட்டு சிறிது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் மிகச்சிறப்பாக அத்திரைப்படத்தை எடுத்து முடித்தார்.

ராவணனின் சிறிய முடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது அடுத்த மிகப்பிரம்மாண்ட படைப்பிற்கு தயாராகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் காவியத்தை அதாவது 120 காட்சிகள் கொண்ட திரைப்படமாக எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அதை திரைப்படமாக்க அவர் இறங்கிவிட்டார். இதில் கமல், விக்ரம், அல்லது சூர்யா நடிக்க வாய்ப்புள்ளது, இசையை பற்றி கவலை இல்லை அனைவருக்கும் அபிமான எ.ஆர். ரஹ்மான் தான். மற்ற கலைஞர்களை தேடும் பணியில் மணிரத்னம் இறங்கியுள்ளார். இது காவியப்படம் ஆதலால் மிகுந்த பொருட்செலவுடன் தயாராக உள்ளது. மேலும் கூடுதல் தகவல் இக்காவியத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

எந்திரனில் சுமார் 400 கோடிகளை மூட்டையில் அள்ளிய பிறகு சிறிய படங்களை தயாரிப்பதையும் சிறிய லாபங்களை பார்ப்பதில் சன் பிக்சருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக மிகச்சிறந்த படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதும் செவி வழிச் செய்தி.

என்ன இருந்தால் என்ன சிறப்பான படங்களை தமிழர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய செய்திதான்.

 

(2 வாக்குகள், சராசரியாக 4.50 ற்கு 5)

 

எந்திரனின் பிரம்மாண்ட உலகளாவிய வெற்றிக்கு பிறகு மீண்டும் ஷங்கர் - கலாநிதி மாறன் - ரஜினி கூட்டணி இணைகிறது. மேலும் இதில் மற்றுமொரு பிரம்மாண்டம் இணைகிறது.

பிரம்மாண்டம்... பிரம்மாண்டம்... பிரம்மாண்டம்...

ஏற்கனவே மூன்று பிரம்மாண்டங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது அது என்ன நான்காவது பிரம்மாண்டம் என்று எண்ணுகிறீர்களா அது தான் கமலஹாசன். ஆமாம் இப்பொழுது எந்திரனையும் விஞ்சும் வகையில் ஷங்கர் - கலாநிதி மாறன் - ரஜினி கூடுதலாக கமலஹசனும் இணைகிறார்.

தற்போது ஷங்கர் 3 இடியட்ஸ் மறுபதிப்பு வேளையில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளார், இப்படத்தில் விஜய் மற்றும் ஜீவா இணைவது உறுதியாகி உள்ளது , ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

3 இடியட்ஸ் திரைப்படம் முடிந்த பிறகு கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சாதரணமாக அல்ல ரூபாய் 500 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை பிரம்மாண்டத்தின் மறுபெயர் இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளார். இதில் திரையுல இரு துருவங்கள் ( நடிப்பில் மட்டும்) ரஜினி-கமல் இணைய உள்ளனர். இது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது மேலும் இந்தியாவின் அனேகமாக ஆசியாவின் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக அமைய விருக்கிறது.

மேலும் சுமார் 30 வருடங்களுக்குப்பிறகு கமல் ரஜினி இணையும் படம் இதுவாகத்தான் இருக்கும். கமலும் ரஜினியும் சினிமா வாழ்க்கையில் இரு துருவங்களாக இருந்தாலும் பொது வாழ்க்கையில் மிகச்சிறந்த நட்புணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். கமலுக்கென்று தனி கூட்டமும் ரஜினிக்கென்று தனி கூட்டவும் உள்ளது. மேலும் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இதுவரை அதாவது கடந்த 30 வருடங்களாக இல்லை இந்த கனவு தற்போது இந்த படத்தின் மூலமாக நிறைவேறவிருக்கிறது.

 

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

 

‘பரத்வாஜை கூப்பிட்டு நான் வாய்ப்பு கொடுத்தும் நான் அழைத்தும் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று’ தாக்கினார் கே.டி. குஞ்சுமோன். ‘காதலுக்கு மரணமில்லை’ படத்தை தயாரித்துள்ளார் குஞ்சுமோன். இந்தப் படத்தின் கதையை படத்தின் இயக்குநர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு குஞ்சுமோன் உச்சத்தில் இருக்கும்போது கூறியுள்ளார். அந்தக் கதையைக் கேட்டு அசந்து போன குஞ்சுமோன் இயக்குநரிடம் நாம் தயாரிக்கலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் ஆனால் குஞ்சுமோனின் வீழ்ச்சியின் காரணமாக அந்தப் படம் தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயின. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதையைப் படமாக்கியுள்ள குஞ்சுமோன் ‘காதலுக்கு மரணமிருக்கோ இல்லையோ என் வாக்குக்கு மரணமில்லை... கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்’ என்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பரத்வாஜை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குஞ்சுமோன் ‘பரத்வாஜ், படமே இல்லாமல் சும்மா இருந்த போது கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் கூப்பிட்டும் வரவில்லை. அவருக்கு என் நன்றிகள்” என்று ஒரு போடு போட்டார்.

 

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2