Thalaippu-Cinema
பதாகை
RSS ஓடை

சினிமா

(3 வாக்குகள், சராசரியாக 5.00 ற்கு 5)

 

1995 ஆம் ஆண்டு தொடங்கி 1997 வரை தொடர்ந்து இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடத்தி சுமார் 200 மில்லியன் டாலர் பணத்தை இறைத்து கட்டியது தான் டைட்டானிக் திரைப்படமாகும். அதே வருடம் வெளியாகி சுமார் 1850 மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டித்தந்தது இந்த திரைப்படம்.

ஹாலிவுட் திரையுலகில் மட்டும் ஆல் உலகில் இந்தியா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. இவ்வவளவு பெரிய பிரம்மாண்டமான கப்பலை யாரும் இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் இத்திரைப்படத்திற்கு மவுசு மேலும் கூடியது.

அது மட்டும் அல்லது இத்திரைப்படம் விருதுகளையும் வாரிக்குவித்தது. 14 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை தட்டிச்சென்றது. அந்த ஆண்டில் டைட்டானிக் பெறாத விருதே இல்லை எனலாம்.

இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron). இவர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய அவதார் (Avatar) திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

இப்பொழுது மேலும் ஒரு கூடுதல் மகிழ்ச்சியான நமக்கு, அதாவது வரும் 2012 மத்தியில் டைட்டானிக் திரைப்படத்தின் 3டி பதிப்பு வெளிவருகிறது என்பது தான் அது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் கூறும் போது " திரை உலகின் மிகப்பெரும் படைப்பான டைட்டானிக் திரைப்படத்தை இப்பொழுது 3டி பதிப்பாக மாற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் 2012 மத்தியுள் இத்திரைப்படத்தின் 3டி பதிப்பை வெளியிட இருக்கிறோம். மேலும் அவதார் (Avatar) திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவதார்-2 (Avatar-2) தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளோம். அவதார்-2 (Avatar-2) திரைப்படம் 2014 -ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், மேலும் அவதார்-3 (Avatar-3) 2015 -ஆம் ஆண்டு இறுதில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்" எண்டு கூறினார்.

மீண்டும் ஒரு திரைப்புராட்சி ஏற்ப்படவிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

(4 வாக்குகள், சராசரியாக 4.75 ற்கு 5)

 

படம்: தி சோசியல் நெட்வொர்க் (The Social Network.)

மொழி: ஆங்கிலம்

இயக்குனர் : டேவிட் பின்செர்

எழுத்து : ஆரோன் சோர்கின் (திரைக்கதை), பெண் மேஸ்டிச் (புத்தகம்)

நட்சத்திரங்கள்:ஜெஸ்சி எய்சென்பேர்க், அன்டுரு கார்பில்டு மற்றும் ஜஸ்டின் டிம்பர்லேக்

கதை கரு: ஒரு இளம் கோடீஸ்வரனை உருவாக்கிய சமுக வளையமைப்பு உருவான கதை !!

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் மார்க் சுக்கேர்பெர்க், கணினி மென்பொருள் வல்லுநர் தனது நுண்ணிய அறிவு திறனால் வலையமைப்பு ஒன்றை உருவாகுகிறார் , அதன் பெயர் தான் "பேஸ்புக் (FaceBook)". மைக்ரோ - வலைபதிவில் மோகம் மற்றும் நிரலாக்க தொழில்நுட்பமும் இணைந்து இந்த வலையமைப்பை தொலைதொடர்பு மற்றும் சமுக வலையமைப்பு துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த வலையமைப்பு மார்க் சுக்கேர்பெர்க்கிற்கு , ஐம்பது கோடிக்கும் அதிகமான நண்பர்கள் மற்றும் இளம் கோடீஸ்வரன் எனும் பட்டதை பெற்றுத்தருகிறது வெறும் ஆறு வருடங்களில் என்றால் அது கண்டிப்பாக குறுகிய ஒரு காலகட்டமே என்பதில் ஐயமில்லை. இந்த மிகபெரும் வெற்றி அவர் வாழ்வில் கொடுக்கும் இன்னல்கள் மற்றும் அவைகளை அவர் வெற்றி கொள்ளவதே மீதி கதை.

உலகில் இணைய தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பேஸ்புக் இணைய தளத்தை உருவாக்கியவரைப் பற்றிய கதை. இணையதளத்தில் மட்டும் அல்ல வெள்ளித்திரையிலும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு லாபம் கிடைக்குமா எனபது போகப் போக தான் தெரியும்.

 

(4 வாக்குகள், சராசரியாக 4.00 ற்கு 5)

 

தமிழில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் விரல்விட்டு என்னக்கூடியதில் முதல் மூன்று விரல்களில் பிடிபட்டுவிடுவார் நமது அபிமான மணிரத்னம் அவர்கள். பகல் நிலவு படத்தில் தனது வெற்றிக்கணக்கை தொடர்ந்த அவர் சற்று முன் வெளியான ராவணனில் சிறிது எதிர்பாராமல் வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தார். மேலும் இதற்கு முந்தைய ஆயுத எழுத்து, இருவர் என வியாபாரரீதியில் தோல்வியை சந்தித்தாலும் அனைத்து படங்களுமே வருங்கால இயக்குனராகும் கனவோடு திரியும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக கருதப்படும் அளவுக்கு மிகச்சிறந்த திரைக்காவியங்கலாக இருக்கிறது. மேலும் இவர் இயக்கிய அஞ்சலி, ரோஜா, மௌன ராகம், நாயகன், அலைபாயுதே என வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக அதிகம், இவரின் படங்களினால் மக்களின் இதயங்களை மிக எளிதில் கட்டிவிடுவார்.

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக விளங்கும் எ.ஆர். ரஹ்மான் இவரது சீடர் என்பது கூடுதல் அங்கீகாரம். எந்த படத்தை எடுத்தாலும் அதனை மிக கவனத்தோடும் வெறியோடும் கடின உழைப்போடும் தான் முடிப்பார். ராவணன் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்க இரவு பகலாக உழைத்து அதனால் இதயவலி ஏற்பட்டு சிறிது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் மிகச்சிறப்பாக அத்திரைப்படத்தை எடுத்து முடித்தார்.

ராவணனின் சிறிய முடங்களுக்குப்பிறகு மீண்டும் தனது அடுத்த மிகப்பிரம்மாண்ட படைப்பிற்கு தயாராகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் காவியத்தை அதாவது 120 காட்சிகள் கொண்ட திரைப்படமாக எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அதை திரைப்படமாக்க அவர் இறங்கிவிட்டார். இதில் கமல், விக்ரம், அல்லது சூர்யா நடிக்க வாய்ப்புள்ளது, இசையை பற்றி கவலை இல்லை அனைவருக்கும் அபிமான எ.ஆர். ரஹ்மான் தான். மற்ற கலைஞர்களை தேடும் பணியில் மணிரத்னம் இறங்கியுள்ளார். இது காவியப்படம் ஆதலால் மிகுந்த பொருட்செலவுடன் தயாராக உள்ளது. மேலும் கூடுதல் தகவல் இக்காவியத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

எந்திரனில் சுமார் 400 கோடிகளை மூட்டையில் அள்ளிய பிறகு சிறிய படங்களை தயாரிப்பதையும் சிறிய லாபங்களை பார்ப்பதில் சன் பிக்சருக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக மிகச்சிறந்த படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதும் செவி வழிச் செய்தி.

என்ன இருந்தால் என்ன சிறப்பான படங்களை தமிழர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய செய்திதான்.

 

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2