Thalaippu-Kalvi
பதாகை
(0 வாக்குகள், சராசரியாக 0 ற்கு 5)

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டு விட்டதாலும், தவறு இல்லாமல் முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற அக்கறையாலும், இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகுதான், அதாவது மே 18ம் தேதி வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வேகமாக வெளியாகி வருகின்றன.

மே முதல் வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகி விடுவது வழக்கம். எனவே இந்த ஆண்டும் அதேபோல வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தேர்தல். மேலும் இன்னும் மதிப்பெண் பட்டியலை தயார் செய்யும் பணியும் முடியவில்லை.

எப்போது தேர்வு வெளியாகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், தேர்வு முடிவு வெளியிடுவதற்கான இறுதி கட்டப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தேர்வு முடிவை வழக்கமான காலகட்டத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக செய்தால் தவறுகள் நேர்வதற்கு அபாயம் உள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலும் 13ம் தேதி வருகிறது.

எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்வு முடிவை வெளியிட்டுவிடலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. மே மாதம் 3-வது வாரத்தில் அனேகமாக 18ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தேர்வுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கை 16ம் தேதி நடைபெறுகிறது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 18ம் தேதியன்று தேர்வு முடிவு வெளியாக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (0)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2