Thalaippu-Kalvi
பதாகை
RSS ஓடை

கல்வி

(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

பிளஸ 2 தேர்வு முடிவில் சென்னை சூளைமேடு டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. பூமிகா 1190 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த எம்.கார்த்திக் 1188 மதிப்பெற் பெற்று 2ம் ரேங்க் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குமரன், ராம்கிஷோர் ஆகியோர் தலா 1186 மதிப்பெண் பெற்று 3வது ரேங்க் பெற்றுள்ளார்.

மொத்த தேர்ச்சி சதவீதம் 83%. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 6 லட்சத்து 409 ஆயிரத்து 844 பேர் எழுதினர். இதில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 222 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 762 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (14ஆம் தேதி) வெயியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இத‌னிடையே த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் எ‌ன்ற இணையதள‌த்‌திலு‌ம் நாளை ‌பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவு வெ‌ளி‌யிட‌ப்படு‌கிறது.

சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் நிருபர்களிடம் கூறுகையில்,

பி.இ, பி.டெக்கில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தொழிற்பிரிவு மாணவர்கள் தங்கள் தொழிற்பிரிவு படிப்பு தொடர்பான பாடம், எழுத்து மற்றும் செய்முறை பாடங்களிலும் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றார்.

Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2